முல்லைத்தீவு - கிச்சிராபுர பகுதியில் நேற்று (26) ஏற்பட்ட கைகலப்பில் 9 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு முல்லியாவலை பொலிஸார் தெரிவிக்கி...
முல்லைத்தீவு - கிச்சிராபுர பகுதியில் நேற்று (26) ஏற்பட்ட
கைகலப்பில் 9 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு முல்லியாவலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிச்சிராபுர பகுதியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் இரண்டின் உறுப்பினர்களுக்கு இடையிலேயே இவ்வாறு கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதில் காயமடைந்த 9 பேரும் முல்லைத்தீவு, மாஞ்சேலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் முல்லியாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.