இந்திய கிரிக்கட் இரசிகர்கள் என்னை இன ரீதியாக வார்த்தைகளால் தாக்கியதாக தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கட் இரசிகர்கள் என்னை இன ரீதியாக வார்த்தைகளால் தாக்கியதாக தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் ஜொகன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் போது இரசிகர் ஒருவரால் வாய்மொழிமூல இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் இது தொடர்பாக தென்ஆபிரிக்க கிரிக்கட் சபை விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு முறைப்பாடு வழங்கியதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த இரசிகர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விளையாட்டுக்களுக்கான மத்தியஸ்த நீதிமன்றம் மற்றும அரங்கின் பாதுகாப்பு குழுக்கள் மத்தியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.