50 வருடங்களுக்கு பின்னர் யாழ் மாநகர சபைக்கு உறுப்பினர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சிக்காக பெற பாடுபட்ட ஏ.எம் ஆஸீக் என்பவருக்கு பட்டியல் உறுப்பி...
50 வருடங்களுக்கு பின்னர் யாழ் மாநகர சபைக்கு உறுப்பினர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சிக்காக பெற பாடுபட்ட ஏ.எம் ஆஸீக் என்பவருக்கு பட்டியல் உறுப்பினர் வழங்கப்பட வேண்டும் என யாழ் முஸ்லீம் சிவில் அமைப்புக்கள் ஐக்கிய தேசிய கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபை சார்பாக வட்டாரம் 13 இல் 596 வாக்குகள் பெறப்பட்டு 1 உறுப்பினர் மாத்திரம் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதனடிப்படையில் குறித்த வாக்குகள் அப்பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளராக உள்ள ஏ.எம் ஆஸிக் என்பவருக்கு மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கையினால் பெறப்பட்டவை ஆகும்.
எனவே தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு யாழ் மாநகர சபை சார்பாக பெறப்பட்ட குறித்த 1 ஆசனம் ஊடாக 2 பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஆசனத்தை சகோதரர் ஆஸிக் என்பவருக்கு வழங்கி யாழ் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுத்தருமாறு குறித்த சமூக அமைப்பினர் கேட்டுள்ளனர்.