நடிகர் கமல்ஹாசன் நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை சீமான் சந்தித்து பேசியுள்ளார். இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்...
நடிகர் கமல்ஹாசன் நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை சீமான் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த ராமேஷ்வரம் இல்லத்தில் இருந்து நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதற்காக மூத்த அரசியல் தலைவர்கள் மு.கருணாநிதி, நல்லக்கண்ணு, விஜயகாந்த் உள்ளிட்டோர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் இன்று காலை கமலின் ஆழ்வார்பேட்டை இல்லதிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை சந்தித்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீமான் கூறுகையில், மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கமல் அரசியலுக்கு வருகிறார்.
அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம்தான் முடிவு செய்யும், படிக்கும் காலத்தில் இருந்தே அவரை ரசித்துள்ளேன்.
நானும் அவரும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஒன்றும் புதியதாக இல்லை என பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.