சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப், வைபர் போன்ற அலைபேசித் தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை, மூன்று தினங்களுக்குள் நீக்கப்ப...
சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப், வைபர் போன்ற அலைபேசித் தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை, மூன்று தினங்களுக்குள் நீக்கப்படுமென, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உபாய முறைகளைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களுக்குள் நுழைபவர்களை, அரசாங்கத்தால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமென்று டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப், வைபர் போன்ற அலைபேசித் தொடர்பு இணையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு, தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவானோர், பல்வேறு உபாய முறைகளைப் பயன்படுத்தி, மேற்படி வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளதென, அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தற்காலிகத் தடை, மூன்று நாட்களுக்குள் நீக்கப்பட்டுவிடுமென, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.