முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நே...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அவருக்கெதிரான வழக்கு விசாரணையில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் மீண்டும் பாதாள உலக குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பழைய நிலைமைகள் மீண்டும் உருவாகியிருப்பதாகவும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நாட்டை ஆட்சி செய்வது தொடர்பில் கருத்து சொலவதாகவும் நாட்டை அவ்வாறு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.