தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்...
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சென்னை கொடுங்கையூர் பகுதியில் கணவன் வீட்டில் இல்லாதபோது அவரது மனைவி தனிமையில் இருந்துள்ளார்.
அதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவனான நிரேஷ் குமார் என்பவர், குறித்த இளம்பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அதன்பின் கத்தியைக் காட்டி மிரட்டி, தகாத முறையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிர்ச்சியடைந்த குறித்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் தப்பியோடிய நிரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இதே போல் கடந்த வாரம் அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.