முல்லைத்தீவில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையினர் மூல்லைத்தீவிற்கு விஐயம் செய்துள்ளனர். இன்...
முல்லைத்தீவில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையினர் மூல்லைத்தீவிற்கு விஐயம் செய்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஒன்று கூடியிருக்கும் மாகாண சபையினர் அடுத்ததாக சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்லவுள்ளனர் . இதன் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று மாலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர்