நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ள...
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை தன்னால் நிராகரிக்க முடியாது என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.