தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியர்வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டத்தைத் தொடர்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியர்வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்ய தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்ட பின்னர், ஸ்டெர்லைட் ஆலைக்கு Seal வைக்கப்பட்டது. அதே சமயம், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.