ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தங்கள் அணிக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக, கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவி...
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தங்கள் அணிக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக, கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 6 தோல்விகளை கண்டுள்ளது. இதனால் எஞ்சிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும்.
புள்ளிப்பட்டியலில் கீழே இருந்த மும்பை அணி, அடுத்தடுத்து வெற்றி பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக, கொல்கத்தா அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதாக அந்த அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது.
அதேபோல், என்னுடைய அணி வீரர்களையும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மும்பை அணிக்கு பிறகு எங்களது ரன் ரேட் குறைந்துள்ளது. அதனை கவனத்தில் கொண்டு விளையாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.