தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் போது திடீரென கலவரம் ஏற்பட்டு பொதுமக்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டனர் . இனி தூத்துக்குடி மக்...
தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் போது திடீரென கலவரம் ஏற்பட்டு பொதுமக்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டனர் . இனி தூத்துக்குடி மக்களை பொலிஸார் துன்புறுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் போது திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் போது பொலிஸார் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணை பல்வேறு வகையில் நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த விசாரணை என்ற பேரில் பலரை பொலிஸார் திடீர் திடீரென காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும் அதனால் தூத்துக்குடி மக்கள் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் கலவரத்தில் ஈடுபடாதவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
மேலும் ஆதாரம் இல்லாமல் யாரையும் விசாரணைக்கு அழைக்க கூடாது எனவும் உத்தரவிட்டர்.