அரசியல் சதி நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் சமராடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிசும்...
அரசியல் சதி நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் சமராடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிசும், ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் காமினி ஜயவிக்கிரம பெரேரா,
“பக்கச்சார்பின்றி செயற்படும் எமது சபாநாயகருக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும். அதுமட்மல்ல, ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கும் அவர் தகுதியுடையவர்” – என்று குறிப்பிட்டார்.