முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் உள்ள பிள்ளையாா் ஆலயத்தில் அடாத்தாக பௌத்த வி காரை அமைக்கப்பட்டுள்ளமை தொடா்பான வழக்கு நீதிமன்றில் உள்ள நிலையில...
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் உள்ள பிள்ளையாா் ஆலயத்தில் அடாத்தாக பௌத்த வி காரை அமைக்கப்பட்டுள்ளமை தொடா்பான வழக்கு நீதிமன்றில் உள்ள நிலையில், குறித் த விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள்
கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போ து, வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் முன்னிலை யாகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தநிலையிலேயே, இவ்வாறு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.