முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள்கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. மாகாண சபையின்...

முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள்கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.
மாகாண சபையின் பேரவைச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பேரவைத்தலைவரான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதன் போது மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பத்திநாதன்இ முன்னாள் பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,
மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இந் நிகழ்விற்கு சபையின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலருக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டபோதிலும்
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பலரும் நிகழ்விற்கு வருகை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












