யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை மாலை பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலி...
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை மாலை பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலிகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் அடி மற்றும் சுண்டுக்குளி பகுதிகளில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இவ்விரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் இவ்விரு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே வகையான மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்று முறைப்பாட்டாளர்கள் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின்படி விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் போலீசார் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பெற்று விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இவ்விரு கொள்ளைச் சம்பவங்களும் பெண்களிடமிருந்து சுமார் 25 ஆயிரம் பெறுமதியான 5 பவுன் தங்கச் சங்கலி அபகரிக்கப்பட்டுளமை தெரியவந்துள்ளது.