கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழ...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும் இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் சமுக வலையத்தள ஆர்வலர்கள் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர் அதன்படி இன்றைய தினம் 25 மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சகல பிரதேசங்களிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் வர்த்தக சங்கம் தனியார் போக்குவரத்து சங்கம் தனியார் நிறுவனங்கள் அரச திணைக்களங்களின் ஆதரவுடன் மிகவும் சுமுகமான நிலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது அத்துடன் ஒரு சில பகுதிகளில் வீதியில் டயர்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அரச போக்குவரத்து சேவைகள் தூரப்பிரதேச சேவைகள் மட்டும் நடைபெறுவதை அவதானிக்கமுடிந்தது. வீதியில் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.