OPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rhei...
OPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தினசரி பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யும் வகையில் கடுமையான பற்றரி சார்ஜ் செய்தல்கள் மற்றும் நியம பரிசோதனைகள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக பல மாத காலம் உட்படுத்தப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்டதன் பின்னரே இந்த பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சார்ஜ் வலுவை குறிப்பிடத்தக்க 50W (10V 5A) எனும் மட்டத்துக்கு Super VOOC உயர்த்துவது என்பதற்கு இந்த சான்று மற்றுமொரு அங்கிகாரமாக அமைந்துள்ளது.

மதிப்பீட்டில் 1000 மாதிரி பரிசோதனைகள் அடங்கியிருந்ததுடன், 600 சுயாதீன Fast-charge/discharge பற்றரி ஆயுள் பரிசோதனைகள் மற்றும் சார்ஜிங் டேர்மினல்கள் மீது 10,000 hot plug பரிசோதனைகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த பரிசோதனை பெறுபேறுகளினூடாக மொபைல் Flash charging தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் தங்கியிருக்கும் தன்மை போன்றன உறுதி செய்கின்றன. சர்வதேச சான்றிதழை கொண்டுள்ளதுடன், நீடித்த காப்புரிமை சொத்து மூலோபாய பங்காண்மைகளுடன் OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் துரிதமான Flash charging அனுபவத்தையும் சேர்க்கின்றது.
உலகப் புகழ்பெற்ற ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, தொடர்ச்சியாக சர்வதேச பாவனையாளர்களுக்கு தொழில்நுட்ப புத்தாக்கத்தினூடாக உயர் மட்ட கையடக்க தொலைபேசி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கிறது. Find X, OPPO R17 Pro ஆகியவற்றில் காணப்படும் SuperVOOC கட்டமைப்புக்கு மேலாக SuperVOOC Flash Charge கட்டமைப்பும் அடங்கியுள்ளது. VOOC Flash Charge இன் அனுமதி வழங்கலை மேலும் விஸ்தரித்த வண்ணம், OPPO இனால் VOOC Flash Charge ecosystem ஐ தனது பங்காளர்களுடன் சேர்ந்து மேம்படுத்தி துறையில் VOOC Flash Charge இன் ஈடுபாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பெருமளவான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த Flash charging அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
SuperVOOC தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட்ஃபோன்கள் சுமார் 10 நிமிடங்களில் 40 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படக்கூடியன. இதில் VOOC இன் 20-watt (5a/4A) மின் விநியோகத்தினூடாக 50-watt (10v/5A) மின் வலு வெளியூட்டல் பெற்றுக் கொள்ள முடிகின்றமை காரணமாக அமைந்துள்ளது. SuperVOOC Flash சார்ஜினால் ஐந்த மடங்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனூடாக தொலைபேசி சார்ஜ் செய்யப்படும் போது பாதுகாப்பு மட்டம் பரிசோதிக்கப்படுகிறது. சார்ஜ் செய்யும் ப்ளக், USB கேபிள், மொபைல் தொலைபேசி மற்றும் பற்றரி போன்றன வெவ்வேறு சிப்களினூடாக பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், ஜேர்மனியின் TUV Rheinland ஆய்வுகூடத்துடன் நெருக்கமாக செயலாற்றி வருவதனூடாக மேலதிக பாதுகாப்பு உறுதிப்பாட்டையும் பேணுகிறது.
TÜV Rheinland AG என்பது தொழில்நுட்ப பரிசோதனை சேவைகளையும், சான்றளிப்புகளையும் வழங்கும் நிறுவனமாகும். இதன் தலைமையகம் ஜேர்மனியின் கொலோன் நகரில் அமைந்துள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இவற்றினூடாக தயாரிப்புகள், முகாமைத்துவ கட்டமைப்புகள், உற்பத்தி செயன்முறைகள் மற்றும் நபர்கள் போன்றவற்றின் பாதுகாப்பு நியம விதிமுறைகள் மற்றும் தகைமைகள் போன்றன பரிசோதிக்கப்படுகின்றன.