சென்னையில் தொடங்கியுள்ள 12-வது ஐ.பி.எல். போட்டியில் பெங்களுருவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்து...
சென்னையில் தொடங்கியுள்ள 12-வது ஐ.பி.எல். போட்டியில் பெங்களுருவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 
ஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சமபலத்துடன் இன்று களமிறங்குகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
ரசிகர்கள் மற்றும் ரசிகைககள் தங்களது கைகளில் டிக்கெட்டுடன் மைதானத்திற்கு வெளியே வெற்றி சின்னம் காட்டியபடியும், செல்பி எடுத்தபடியும், முகத்தில் தங்களது விருப்ப கிரிக்கெட் வீரரின் பெயரை வர்ணம் பூசியபடியும், வீரரின் பெயரிடப்பட்ட பனியனை அணிந்தபடியும் போட்டியை கண்டு களிக்க குவிந்துள்ளனர்.