“சிறையிலிருந்து வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், வெளியே வந்து இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது...
“சிறையிலிருந்து வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், வெளியே வந்து இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது. அவர்களின் தந்தை வெளியில் வந்ததுபோல அவர்கள் உணர்ந்தனர். நாட்டைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியலை இனி நான் செய்யப்போகின்றேன்.”

– இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (26) நடைபெற்ற பூஜை வழிபாடொன்றின் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாளையும் நாளைமறுதினமும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அந்தத் தகவல்களினால் சில சமயம் பதற்றமான சூழல் ஏற்படலாம்.
குறித்த தகவல்களை மிகவும் பொறுப்புடன் வெளியிடவுள்ளோம். எனினும், எந்தச் சந்தர்ப்பத்திலும், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் பொறுமையுடன், தூரநோக்குடன் செயற்படுமாறு விசேடமாக இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பிரச்சினைகள் ஏற்படும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கே நட்டம்” – என்றார்.