உலகக் கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் தப்பியது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. இதன் மூலம் பாகிஸ்தா...
உலகக் கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் தப்பியது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-ZHK1GViwjff2xgqfztD2zmWBJzZutP43EjWLYvrS4EupowRaS3Nxhe3f65K5Y-2NdlUC0SRX0Ckz1anN3T9ZbF4i8thdiM8rBzG2bQR-GAmiECqzPyl7wq2anY2hsqz3xUJV-AZoC-o/s640/201906291846389580_1_wahab3._L_styvpf.jpg)
இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீட்சில் நேற்று நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைவர் குல்பதீன், ரஹ்மத் ஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. 5வது ஓவரில் ஷகீன் அப்ரிடியை கொண்டு வர, இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் மூன்று பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 10 ஓட்டங்கள் எடுத்த குல்பதீன் 15 ஓட்டங்களுடனும் ஷாகிதி ஓட்டமெதனையும் பெறாமலும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர்.
ரஹ்மத் ஷா 35 ஓட்டங்கள் , இமாத் வாசிமிடம் சிக்கினார். அஸ்கர் 42 ஓட்டங்கள் எடுக்க, இக்ரம் 24 ஓட்டங்கள் (66 பந்து) எடுத்தார்.
முகமது நபி 16 ஓட்டங்கள் எடுக்க, ஜத்ரன் 42 ஓட்டங்கள் எடுத்து திரும்பினார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களையிழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது. ஷின்வாரி (19), முஜீப் அர் ரஹ்மான் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
எளிய இலக்கு
பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறியது. முஜீப் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் பகர் ஜமான் ‘டக்’ அவுட்டானார். இமாம் (36), பாபர் (45) சற்று உதவினர். ஹபீஸ் (19), ஹரிஸ் (27), அணித்தலைவர் சர்பராஸ் (18) சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, சிக்கல் ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் இமாத் வாசிமுடன் இணைந்த வகாப் ரியாஸ், சிக்சர், பவுண்டரி என விளாச, வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 4 ஓட்டங்கள் கிடைத்தன. அடுத்து இமாத் ஒரு பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்களையிழந்து 230 ஓட்டங்கள் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது. இமாத் (49), வகாப் (15) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.