2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றுவருகின்றது. லண்டன் ல...
2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றுவருகின்றது.
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நியூஸிலாந்து அணி 242 ஓட்டங்களை இங்கிலாந்தின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூஸிலாந்து அணி சார்பாக, ஹென்றி நிக்கோலஸ் 55 ஓட்டங்களையும், ரொம் லதம் 47 ஓட்டங்களையும், வில்லியம்ஸன் 30 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில், லியம் ப்ளங்கெற் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் வூட், ஜொப்ரா ஆர்சர் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி 242 வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடவுள்ளது.