ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை, செயற்குழுவில் பரிந்துரைக்க முடிவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி நா...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை, செயற்குழுவில் பரிந்துரைக்க முடிவாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்த சந்திப்பில், சஜித்தை வேட்பாளராக பரிந்துரைக்க முடிவாகியுள்ளது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் ஏகமனதான சம்மதம் உள்ளதாக, சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இறுதியில் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதுவரை சஜித் எதிர்ப்பாளராக இருந்த ரணில், ரவி கருணாநாயக்க ஆகியோரும், கரு ஜயசூரியவும் சஜித் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கட்சியின் விதிகளின்படி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யலாமென ரணில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாளை செயற்குழுவில் முறைப்படி சஜித்தின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அதன்படிஇ ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் சிறப்பு செயற்குழு கூட்டம் நாளை (25) சிறிகோதாவில் நடைபெறுகிறது.