இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு நிபந்தனைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக நின்று இந்த நாட்டை கட்டியெழுப்ப போகின்ற ...
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு நிபந்தனைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக நின்று இந்த நாட்டை கட்டியெழுப்ப போகின்ற ஒரே ஒரு வேட்பாளர் இந்த சஜித் பிரேமதாசதான் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
இன்று மத்துகமவில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
“ஏதோ சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படவுள்ளதாக சில வதந்திகள் பரவுவதை அறிகிறேன். அப்படி எந்தவொரு நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படவில்லை. அடிபணிய போவதுமில்லை“ என்றார்.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க உடன்பட்டுள்ளாரென செய்தி வெளியான நிலையில், அதை மறுத்துள்ளார் சஜித் பிரேமதாச.