பிரதமரின் கீழான பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் பயிலுநர் செயல்திட்ட உதவியாளராக நாடுமுழுவதும் வழங்கப்பட்டிருந்த நியமனத்தை தேர்தல்கள் ஆணைக்குழ...
பிரதமரின் கீழான பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் பயிலுநர் செயல்திட்ட உதவியாளராக நாடுமுழுவதும் வழங்கப்பட்டிருந்த நியமனத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தி அறிவுறுத்தல் வழங்கியது.

இதனால் அந்தப் பதவிக்கு வடக்கு மாகாணத்தில் நியமனம் பெற்ற 1440 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்தப் பதவிக்கான நியமனக் கடிதங்களும் அரசினால் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தெரிவாகியவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமது நியமனத்தை பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை முதல் இன்று வரை அலுவலக நேரத்தில் அங்கு அமர்த்தி வைக்கப்பட்டனர்.
எனினும் இன்று மாலை 4 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தொலைநகலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எந்த நியமனமும் வழங்கப்படக் கூடாது என்ற நிபந்தனையை உள்ளடக்கி வந்தமையினால் பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனம் இடைநிறுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி அரச அதிபரினால் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமர்ந்திருந்தவந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் நியமனம் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதுடன் அரசினையும் திட்டி தீர்த்தனர்.
நாடுமுழுவதும் உள்ள கிராம அலுவலர்களிற்கு உதவியாளர்களாகப் பணியாற்றும் வகையில் தேசிய ரீதியில் க.பொ.த உயர்தரத்துடன் பயிலுநர்களாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் கொழும்பில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் கடந்த 16ஆம் திகதி மேற்படி நியமனம் வழங்கப்பட்டு பணிக்கமர்த்தக்படும் ஊழியர்களில் வடக்கின் 5 மாவட்டத்திற்குமாக மொத்தம் ஆயிரத்து 440 பேர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆயிரத்து 440 பேரில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 999 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு 105 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 144 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதோடு மன்னார் மாவட்டத்திற்கு 100 பேரும் வவுனியா மாவட்டத்திற்கு 92 பேரும் நியமிக்கப்பட்டனர்.
பயிலுநர் செயற்திட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிக் காலத்திற்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் அக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படும் எனவும் வழங்கப்பட்ட நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.