தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மூன்று அரசு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. வீடமைப்பு...
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மூன்று அரசு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
வீடமைப்பு, கட்டுமான மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமுர்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவையே சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றன.
இதேவேளை, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐ.டி.என்) ஆகியவைக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்கச்சார்பான தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கும்படி அவை எச்சரிக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளத் தவறினால் இந்த அரச ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.