வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மற்றுமொரு ஊடக சந்திப்பு இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி பாரதி ஸ்டார் கொட்டலில் இடம்பெற்றது. குறித...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மற்றுமொரு ஊடக சந்திப்பு இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி பாரதி ஸ்டார் கொட்டலில் இடம்பெற்றது. குறித் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்ட தமது குழந்தைகள் எங்கே எனவு்ம, அவர்களை கண்டுபிடிப்பதற்கு ஐநா அமைதிப்படையினர் இறக்கப்பட்டு ரகசிய முகாம்களை தேட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


10 ஆண்டுகளாக எமது பிள்ளைகளை நாம் தேடி அலைகின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. இந்த அரசாங்கத்தை இனியும் நம்ப நாம் தயார் இல்லை. இரண்டு வருடங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு வழங்கியது. என்ன நடந்தது. எதுவுமே நடக்கவில்லை. 2 வருட அவகாசத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கைக்கு வழங்கி எமக்கு துரோகம் செய்துள்ளனர்.
அரசாங்கத்தை நாம் நம்பமாட்டோம். எமக்கு சர்வதேச அமைதி படையை அனுப்பி இங்கு காணப்படும் இரகசிய முகாம்களை கண்டு பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஓ எம் பி அலுவலகத்தை நாம் ஏற்க போவதில்லை. அதனால் வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா பணம் எமக்கு தேவை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேசமே எமது பிள்ளைகள் எங்கே? எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது? எமது பிள்ளைகளை தொலைத்துவிட்டு இன்றும் கண்ணீருடன் வாழ்கின்றோம். பிள்ளைகளை தேடி தேடி இன்று மருந்துகளுடன் அலைகின்றோம். நாங்கள் நோயாளிகளாக்கப்பட்டுள்ளோம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள் என கேட்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கிராமங்கள் தோறும் கண்டறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாகவும், அவர்களிற்கான சிறு சிறு உதவிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கென வெளிநாடுகளிலிருந்தும், வேறு பலராலும் உதவிகள் கிடைத்ததாகவும் அவற்றை மக்களிற்கு பகிர்ந்தளிக்காமல் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை தந்தால் வெளிப்படுத்த முடியும் என அவர்களிடம் வினவியபோது,
அவ்வாறான ஆதராங்கள் இல்லை எனவும், சிலரால் வாய்மூலமாக கூறப்படும் விடயங்களை வைத்தே இவ்வாறு தாம் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவ்வாறான ஆதாரங்கள் இருப்பின் விரைவில் அதை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் ஒரு தரப்பினர் சில விடயங்களை குறிப்பிட்டனர். தாம் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பலரின் அச்சுறுத்தலிற்கு மத்தியில் வலிந்து காணாமல் ஆக்க்ப்பட்டவர்களின் விடயங்களை கையாள்வதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பணத்திற்காக இவ்வாறான அமைப்புக்களை உருவாக்கி சிலரதும் அரசியல் கட்சி ஒன்றினதும் நலனிற்காக இவர்கள் ஒருசிலர் செயற்படுவதாகவும் இதன்போது சிலரால் ஊடக சந்திப்பு இடம்பெற்ற சமயம் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.