தேர்தல் சட்டவிதிகளை மீறிய 83 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர ...
தேர்தல் சட்டவிதிகளை மீறிய 83 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் அதிகாரிகள் அந்தந்த இடங்களை நோக்கி சென்றுள்ளதாக தெரிவித்தார்.
பொலிஸார் குறைவாக கடமையாற்றும் பிரதேசங்களுக்கு இவ்வாறு சென்றுள்ள பொலிஸார் நாளை காலை முதல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடு முழுவதும் தேர்தலுடன் தொடர்புடைய 105 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக 111 முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 83 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிதியட்சகர் ருவான் குணசேகர மேலும் கூறியுள்ளார்.