ஈராக்கில் மீண்டும் வன்முறை இடம்பெற்றுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் வரை காயமடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு ...
ஈராக்கில் மீண்டும் வன்முறை இடம்பெற்றுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் வரை காயமடைந்தனர்.
தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக ராஷித் தெருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது . இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் உந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்தி பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஈராக்கில் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதற்காக போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுவதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.