ஜனாதிபதியின் அழகான இலங்கை என்னும் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் சுவரோவியங்கள் வரையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வார...
ஜனாதிபதியின் அழகான இலங்கை என்னும் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் சுவரோவியங்கள் வரையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில் அவருடைய அழகான இலங்கை என்னும் செயற்திட்டத்தின் கீழ், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகு படுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் வவுனியாவில் சி வில் பா துகாப்பு குழு, பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் இணைந்து சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா சந்தை சுற்று மதிலில் சி வில் பா துகாப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து சுவரை சுத்தம் செய்து ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன்,
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் சுவர்களில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.