(நன்றி : உதயன் ந.லோகதயாளன்.) யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைப் பரப்பிரப்பிற்குள் ஏ32 சாலையில் அறுகம்பவெளிக் கிராமத்தில் ஆர...
(நன்றி : உதயன் ந.லோகதயாளன்.)
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைப் பரப்பிரப்பிற்குள் ஏ32 சாலையில் அறுகம்பவெளிக் கிராமத்தில் ஆரம்பிக்கப்படும் காற்றாளை மின் உற்பத்தி நிலையமானது மேற்கே யாழ்ப்பாணத்திசையின் கோவிலாக்கண்டி கிராமத்தின் எல்லைவரை நீண்ட பிரதேசத்தினை ஆக்கிரமிப்பதனால் அச்சமும் மக்கள் மனதை ஆக்கிரமிக்கின்றது.

இலங்கை மின்சார சபைக்கு 61 வீத பங்கெம் 39 விகித பங்கு தனியாருக்கும் சொந்தமான ஓர் நிறுவனத்தால் இப் பகுதியில் 8 காற்றாடிகள் மூலம் மாதாந்தம் 20 மெகா மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்காக ஏ32 சாலையின் 11வது கிலோ மீற்றருக்கு நேரான கடற்கரையில் இருந்து 8 வது கிலோமீற்றரையும் தாண்டி நீள்கின்றது.

இவ்வாறு அமைக்கப்படும் 8 காற்றாளையுன் மூலம் நாள் ஒன்றிற்கு 20 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தற்போது நாள் ஒன்றிற்கு 50 மெகா வாட்ஸ் மின்சாரம் தேவையாகவுள்ளது. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 17 மெகாவாட்ஸ் மின்சாரம் தேவையாகவுள்ளது. இதேநேரம் பளையில் இயங்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஊடாக 24 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேநேரம் தற்போது அறுகம்பவெளிக் கிராமத்தில் ஆரம்பிக்கப்படும் காற்றாளை மின் உற்பத்தி நிலையந்திற்காக தெற்கில் இருந்து அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்டபோதிலும் குறைந்த பட்சல் உள்ளூராட்சி சபையிலோ அல்லது அப்பகுதி மீன்பிடி அமைப்புக்களின் சம்மதங்கள் எவையும் பெறப்படவில்லை. இதில் கிழக்கில் ஆரம்பிக்கும் இடமானது வெட்டை வெளியாக கானப்படுகின்றபோதிலும் மேற்கே யாழ்ப்பாணத்திசையினை நோக்கி நகரும் திசையில் கோவிலாக்கண்டி கிராமத்தின் எல்லைவரை நீண்ட பிரதேசத்தினை ஆக்கிரமிப்பதனால் அப்பகுதியில் பல மக்கள் குடியிருப்புக்களும் உள்ளடங்கும் நிலமை கானப்படுகின்றதே மக்கள் மனதை அச்சம் ஆக்கிரமிக கா்ணமாகின்றது.

இங்கே அமைக்கப்படும் 8 காற்றாடிவளும் ஒவ்வொன்றும் 400 மீற்றர் இடைவெளி தூரத்தில் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் கடலை அண்டிய பகெதியில் கடல்தொழில் புரிந்த அடையாளம் மட்டுமல்ல தரையில. 50 மீற்றரில் வீடுகள் இருந்த அடையாளமும் தற்போது 100 மீற்றர் தூ்த்தில் புதிய வீடுகளும் உண்டு. இங்கே பிரதேச சபையின் தவிசாளர் தம்மிடம் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தாளும் இலாபத்தின் 20 வீதம் உள்ளூராட்சி சபைக்கு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓர் திட்டர்தை ஆரம்பித்தால் அத் திட்டத்தின் இலாபத்தில் 15 வீதம் பிரதேச அபிவிருத்திக்கு வழங்க வேண்டும் என்பது சகல திட்ட நிபந்தனையாக இருக்கும் நிலையில் அதனையே அவர்கள் பிரதேச சபைக்கு வழங்க இணங்கியிருப்பதாகவே தெரிகின்றது. இதேநேரம் குறித்த திட்டம் இடம்பெறும் பகுதியில் ஆங்காங்கே ஓர் அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளதெ. அதில் " அங்கீகரிக்கப்படாத நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது. அத்துமீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் " என இலங்கை மின்சார சபையின் இலட்சணை பொறித்த அறிவித்தல் நாட்டப்பட்டுள்ளது.
திட்டம் இடம்பெறும்போதே நுழைவு அனுமதி இல.லையெனில் கடற்கரைக்குச் செல்லும் வீதிகளின் எதிர்கால நிலமை என்ன எனவும் இப்பகுதி அனைத்தும் தடை செய்யப்பட்டால் தமது சொந்த நிலங்களையுல் அரசு அபகரிக்குமா , அதேநேரம் இப்பகுதியினை நம்பி வாழ்ந்த மீனவர்களின் நிலமை என்ன என்ற மக்களின் கேள்விகளிற்கு அப.பால் எதிர்காலத்தில் இக்காற்றாலை மூலம் முகில் கூட்டமே கூடாது மழை வீழ்ச்சியே ஏற்படாது என்ற வாத ்களிற்கும் உரிய தரப்புக்கள் மக்களிற்கு எந்த விளக்கத்தையும் அளித்ததாகவும் தெரியவில்லை.
இதேநேரம் இக் காற்றாளைகளிற்காக தற்போது எடுத்துவரப்படும் இராட்சத குழாய்கள் 106 சில்லுகள் பொருத்தப்பட்ட கன்டேனர்கள் மூலம் 80 அடி நீளமான குழாய்கள் எடுத்துவரப்படுகின்றன. இவ்வாறு எடுத்து வரப்படும் குழாய்களானது அப்பகுதியில் அமைக்கப்படும் மேடைகளில் 4 குளாய்கள் ஒன்றாகப் பொருத்தப்படவிள்ளன. இதற்காக அமைக்கப்படும் மேடைகளிற்காக 33 மீற்றர் தாள நிலத்தில் கொங்கிறீட் இடப்பட்டு நிலத்தின் மேல் 10 அடிவரை உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒவ்வொரு காற்றாடியும் 350 அடி உயரமாக அமையவுள்ளமை உறெது செய்யப்படுவதனால் இதில் இமைக்கப்படும் விசிறிகள் 200 அடியை கொண்டதாக அமையும்.
இதன் மூலம் மறவன்புலவு , கோவிலாங்கண்டி வரையிலான கிராமத்தின் புவிச்சரிதவியல் மாற்றமடையுமா இல்லையா என அப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்வி தொடர்பிலும் சிந்திக்கவேண்டியே உள்ளதோடு இதற்கு உரிய தரப்புக்கள் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடும் உண்டு.
இவை அனைத்தும் தொடர்பில் ஆரம்பம் முதலே மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டாலும் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலமையை நேரில் அவதானிக்கும்போதும் அதனை தடுக்கும் சக்தி உண்டா என்பதும் கேள்விக்குரிய சந்தேகங்களே...