யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சில தினங்களின் முன்னர் தோற்கடிக்கப்பட்டிருந்தது. எனினும், தனக்குள்ள தற்துணிவின் அடிப்படையில் வரவு செலவ...
யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சில தினங்களின் முன்னர் தோற்கடிக்கப்பட்டிருந்தது. எனினும், தனக்குள்ள தற்துணிவின் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதாக யாழ மாநகரசபை முதல்வர் உடனடியாக சபையில் அறிவித்திருந்தார். எனினும், இது சபை ஒழுங்குமுறையை மீறிய நடவடிக்கை, சட்ட வலிமையற்றது.
வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் திருத்தங்களுடன் 14 நாட்களிற்குள் சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதே உள்ளூராட்சி விதி. அப்போதும் தோற்கடிக்கப்பட்டால்கூட, இயல்பாகவே அது நிறைவேற்றப்பட்டதாக கொள்ளப்படும். சபை முதல்வர், தனது தற்துணிவின் அடிப்படையில் நிறைவேற்றுவதாக சபையில் அறிவிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
எனினும், யாழ் மாநகரசபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில், பெரும்பாலான உறுப்பினர்களால் அது தோற்கடிக்கப்பட்டது. எனினும், உள்ளூராட்சி விதிகளை அறிந்திருக்காத முதல்வர் ஆர்னோல்ட், தனது தற்தணிவின் அடிப்படையில் நிறைவேற்றுவதாக அறிவித்தார். அது விதி மீறலானது. உள்ளூராட்சி சட்டவிதியின்படி, தற்போதும் யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்த விவகாரத்தை விடயமறிந்தவர்கள், ஆர்னோல்ட்டிற்கு சொல்லிக் கொடுத்து, வழக்கம் போல அவசரக்குடுக்கைத்தனமாக நடக்க வேண்டாமென குட்டு வைத்துள்ளனர்.
எதிர்வரும் 5ம் திகதி மாநகரசபையின் அமர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, அந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து, அன்றைய தினத்தில் திருத்தம் செய்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இதன்படி, நிகழ்ச்சி நிரலில் திருத்தம் செய்த கடிதங்கள், சகல மாநகரசபை உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.