சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் இசைப்படுமென்ற அரசின் அறிவிப்பு தமிழர்களையும், தமிழை தாய் மொழியாக கொண்ட எமது சகோதரர்களா...
சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் இசைப்படுமென்ற அரசின் அறிவிப்பு தமிழர்களையும், தமிழை தாய் மொழியாக கொண்ட எமது சகோதரர்களான முஸ்லிம் மக்களையும் உணர்வுபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கை. சுயமரியாதை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் ஒரேயொரு விதத்தில் மட்டுமே எமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். கொழும்பில் அரச ஏற்பாட்டில் நடக்கும் சுதந்திரதின கொண்டாட்டத்தை மட்டுமல்ல, ஏனைய மாகாணங்களிலும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிற சகல சுதந்திரதின கொண்டாட்டங்களை புறக்கணிக்கும்படி மக்களை அழைக்கிறோம்.
இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா.
யாழில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும் இலங்கை நாட்டின் சுதந்திரதின நிகழ்வில், கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள அரச நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்பதை அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஊடகங்களில் இது பற்றிய செய்தி வெளியானபோது, பல்வேறு தமிழ் தேசிய தரப்புக்களில் இருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லையென அரசாங்கத்தின் சார்பில் பல அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால், இப்பொழுது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்பது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இலங்கைத்தீவில் வாழுகின்ற தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இரண்டாம் தர பிரஜைகள் என்கிற தோரணையில் அரசாங்கம் நடந்து கொள்கிறது என்கிற தவிர்க்க முடியாத உணர்விற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து அரச சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்தமுறை அந்த முடிவு நன்கு ஆலோசிக்கப்பட்ட பின்னர்தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களையும், தமிழை தாய் மொழியாக கொண்ட எமது சகோதரர்களான முஸ்லிம் மக்களையும் உணர்வுபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கையென பகிரங்கமாக தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
சுயமரியாதை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில், இலங்கையை தாய் நாடாக கொண்ட எமது மக்களை பொறுத்தவரையில், ஒரேயொரு விதத்தில் மட்டுமே எமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். கொழும்பில் அரச ஏற்பாட்டில் நடக்கும் சுதந்திரதின கொண்டாட்டத்தை மட்டுமல்ல, ஏனைய மாகாணங்களிலும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிற சகல சுதந்திரதின கொண்டாட்டங்களை புறக்கணிக்கும்படி மக்களை அழைக்கிறோம்.
தமது எதிர்ப்பை வெளிப்படுத்த மறந்துவிடக்கூடாதென்பதை மக்களிற்கு தெரிவிக்கிறோம். இது இலங்கைத்தீவில் பேசப்படும் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது. இதை தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அரசாங்கத்தின் இந்த முடிவு தமிழர்களாலும், தமிழை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம் மக்களாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் அண்மைய சில வாரங்களில் எங்களையும் தமிழ் தேசிய பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு கூட்டு முன்னணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளோம். கடந்த மார்கழி மாதம் முதல் தை மாதம் வரை நடைபெற்றது. இந்த நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அதைப்பற்றி நான் விளக்கவில்லை. இந்த நடவடிக்கைகள் எங்கு போய் முடியும்மென எனக்கு தெரியாது. இது வெற்றியளிக்குமா, தோல்வியடையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. எது எபபடியிருந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கைத்தீவில் நிறைவேற்றி வைப்பதற்கான அரசியல் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உறுதியான, நேர்மையான, சந்தர்ப்பவாதமற்ற அரசியல் தலைமையை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
தமிழ் அரசு கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியம் சார்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு கூட்டில் கொண்டு வர முடியுமா என்பதை முயற்சிப்போம். கூட்டமைப்பிலுள்ள ரெலோ, புளொட் இரண்டும் கூட்டமைப்பில் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளதால் அவர்கள் தொடர்பில் எமக்கு எதிர்பார்ப்பில்லை. ஆனால் தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் ஏனைய அரசியல்கட்சிகள் ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு அணியாக திரள முடியுமென்ற நம்பிக்கை எமக்குண்டு. ஏன் திரள முடியாது என்பதுதான் மக்கள் மத்தியிலுள்ள கேள்வியாக உள்ளது. எமது முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்போம்.
ஆனால் அதேநேரத்தில் யதார்த்தங்கள் கசப்பானவை. இந்த முயற்சியில் எமக்கு கிடைத்த அனுபவங்கள் சற்று கசப்பானவை என்ற அடிப்படையில், நாங்கள் யதார்த்த ரீதியில் சிந்திப்பவர்கள் என்ற அடிப்படையில், தேவைப்படின் எமது தமிழ் தேசிய கட்சி தனித்து இந்த தேர்தலை சந்திக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளோம். அதற்கு ஏதுவாக எம்முடன் இணைந்து செயற்பட விரும்புகிற தமிழ் அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு, ஒளிவுமறைவற்ற-இதயபூர்வமான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம்.

ஜனநாயகரீதியான, கூட்டு தலைமையை கொண்ட, மக்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் கூட்டணியை உருவாக்க முடியுமென நம்புகிறோம். அது முடியாவிட்டால், நாடாளுமன்ற தேர்தலை தனித்து சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறோம்.
எதிர்காலத்தில் எமது மக்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது. மக்கள் பட்ட கஸ்ரங்களிற்கு, இழந்தவற்றிற்கு ஈடு செய்யக்கூடிய காத்திரமான அரசியல் தீர்வை, அவர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அரசியல் அபிலாசைகளை பூரணமாக திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் வென்றெடுக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் எமது அரசியல் பயணத்தை தொடர முடிவெடுத்துள்ளோம்.
நாம் தனித்து தேர்தலை சந்திப்பதாக இருந்தாலோ, வேறு சில அரசியல் கட்சிகளையும் இணைத்து போட்டியிட்டாலோ சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவும், நான் திருகோணமலையில் போட்டியிடவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.