இலங்கையில் கோவிட்- 19 (கொரானா) தாக்கத்திற்கு உள்ளாகிய நால்வர் குணமடைந்துள்ளனர். கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட...
இலங்கையில் கோவிட்- 19 (கொரானா) தாக்கத்திற்கு உள்ளாகிய நால்வர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதன்முதலில் சீனப் பெண்ணொருவரிடம் கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்தார்.
இதன்பின்னர், இத்தாலிய சுற்றுலா வழிகாட்டிகளின் பயண வழிகாட்டிய செயற்பட்ட ஒருவர் கொரொனா தொற்றிற்கு இலக்கானார். அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருநதவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்த திரும்பியவர்களுடன் பழகியவர்கள் என இதுவரை 76 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையரான சுற்றுலா வழிகாட்டி ஏற்கனவே குணமடைந்திருந்தார். தற்போது நால்வர் குணமடைந்து வெளியேற தயாராக உள்ளதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் மேலும் சில சோதனைகளிற்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.