அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று நடந்த துப்பாகிச்சூட்டில் ஐவர் காயமடைந்தனர். அவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ...
அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று நடந்த துப்பாகிச்சூட்டில் ஐவர் காயமடைந்தனர்.
அவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர். மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தொற்றிற்கு இலக்கானவரென கருதப்படும் ஒரு கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலையில் நேற்று முதல் அமைதியின்மை ஏற்பட்டது. தம்மை வேறிடங்களிற்கு மாற்றும்படி கைதிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சிறைச்சாலைக்குள் தீயும் வைக்கப்பட்டது.
நேரமாக ஆக பதற்றம் அதிகரித்து, இன்று மாலையில் கைதிகள் சிறைக்கூடுகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயன்றனர். கைதிகளின் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சிறைக்காவலர்கள், மேலதிக உதவி கோரப்பட்டதையடுத்து, அதிரடிப்படையினர் அங்கு சென்றனர்.
பவள் கவச வாகனங்கள் சகிதம் அங்கு விரைந்த அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனபோது ஐவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்தனர். இதையடுத்து, கைதிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உடனடியாக உயிரிழந்தார். இரண்டாவது கைதியும் பின்னர் உயிரிழந்துள்ளார்.