வர்த்தகர்கள் பதுக்கவில்லை: வணிகர் கழகம்!

வர்த்தகர்கள் பதுக்கவில்லை: வணிகர் கழகம்!

அத்தியாவசியப் பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதிக விலைக்கு விற்கவும் இல்லை. மக்களுக்கான சேவையாக இரவு பகல் பாராது வர்த்தகர்கள் செயற்படு...

அத்தியாவசியப் பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதிக விலைக்கு விற்கவும் இல்லை. மக்களுக்கான சேவையாக இரவு பகல் பாராது வர்த்தகர்கள் செயற்படுகின்றபோது வர்த்தகர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ள யாழ் வணிகர் கழகத் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர், பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகின்ற சேவையை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் தயாராகவே இருக்கின்றனர் எனத் தெரிவித்தனர்.

யாழ் வணிகர் கழகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே வர்த்தக சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன் போது மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் தேவையான பொருட்கள் உள்ளன. அதேநேரம் தேவைக்கேற்ப பொருட்கள் இறக்குமதிகளும் செய்யப்படுகின்றன. ஆகையினால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வர்த்தகர்களிடம் பொருட்கள் இருக்கும் வரையில் அல்லது இறக்குமதிகள் வரும் வரையில் தொடர்ந்தும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

ஆனால் கொழும்பில் இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டால் அல்லது உற்பத்திகள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே பொருட்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆயினும் தற்போது வரை கையிருப்பில் உள்ள பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற பொருட்களை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப வர்த்தகர்கள் விநியோகித்து வருகின்றனர்.



ஆகவே நாம் மீண்டும் மீண்டும் சொல்லுவது தென்னிலங்கையில் இறக்குமதிகள் அல்லது உற்பத்திப் பொருட்கள் தடைசெய்யப்பட்டால் தான் அதில் பிரச்சனைகள் வரும். ஆகவே தற்பொதுவரை அதற்கான தடைகள் ஏதும் இல்லாததால் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்ற பொருட்களை வைத்து போதுமான அளவு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

ஆகவே பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதேபோன்று அதிக விலைக்கும் விற்கவில்லை.

எனவே பதுக்குவதாகவோ அல்லது அதிக விலைக்கு விற்கப்படுவதாகவோ வெளிவருகின்ற தகவல்களில் உண்மையில்லை. மக்களுக்கான உன்னத சேவைகளை வர்த்தகர்கள் கடந்த போர்க் காலத்திலும் ஆற்றி வந்திருக்கின்றனர்.



அதேபோன்றே தொடர்ந்தும் பொதுமக்களுக்கான சேவைகளை வர்த்தகர்கள் வழங்குவார்கள்.

அண்மைய சிலநாட்களாக கொரோனா அச்சத்தால் பெருமளவில் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று அதிகளவிலான பொருட்களைக் கொள்வனவு செய்திருக்கின்றனர். அதிலும் இரவு பகல் என மக்கள் தமக்கான பொருட்களை வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆகவே இரவு பகல் பாராது மக்களுக்கான சேவையாக வர்த்தகர்கள் செயற்பட்டிருக்கின்றனர். அவ்வாறு வர்த்தகர்கள் செயற்படுகின்றபோது பொருட்களை பதுக்குவதாகவோ அல்லது அதிக விலைக்கு விற்பதாகவோ சொல்லுவது மிகவும் மனவருத்தத்தை தருகின்றது. அவ்வாறான அரசஅ திபர் தான் கூறியதாக வந்தசெய்திகளிலும் உண்மையில்லை. பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு வர்த்தகர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே நாம் மீண்டும் மீண்டும் மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில் உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் தாராளமாகக் கொள்வனவு செய்யலாம். ஆனால் பழுதடையக் கூடிய பொருட்களை கொள்வனவு செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு எங்களிடம் உள்ளது. ஆகையினால் நீங்கள் அச்சப்படவோ பதற்றப்படவோ அவசரப்படவோ தேவையில்லை. நாம் உங்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர்ந்தும் செய்வோம் என்றனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வர்த்தகர்கள் பதுக்கவில்லை: வணிகர் கழகம்!
வர்த்தகர்கள் பதுக்கவில்லை: வணிகர் கழகம்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsFZvLN96UWBVswbC6FXieTJgpKJLKx4_Sxkp9zQu3VHxJ5GBcNWTfeTkFUtNqd_FOsYCUknWtrTY5wUUQNkwIU-euzGPdJb96oP-wu4veBTtN9NAwbSCJUgi4Bk3SZk0IeVAT6kKcFlg/s640/vani.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsFZvLN96UWBVswbC6FXieTJgpKJLKx4_Sxkp9zQu3VHxJ5GBcNWTfeTkFUtNqd_FOsYCUknWtrTY5wUUQNkwIU-euzGPdJb96oP-wu4veBTtN9NAwbSCJUgi4Bk3SZk0IeVAT6kKcFlg/s72-c/vani.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/03/blog-post_69.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/03/blog-post_69.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content