தமீழீழ சைபர் தாக்குதல் மூலம் தரவுகள் எதுவும் திருடப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.

தமீழீழ சைபர் தாக்குதல் மூலம் தரவுகள் எதுவும் திருடப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.

தமிழீழ சைபர் படையணி எனும் குழுவினரால் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் w...

தமிழீழ சைபர் படையணி எனும் குழுவினரால் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் www.slbfe.lk ஆகிய அரசாங்க இணையத்தளங்கள் மீது நேற்றையதினம் (30) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தரவுகள் திருடப்படவில்லை என, இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு  ஒருங்கிணைப்பு மையம்  தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வகையான செயற்பாட்டாளர்களின் இறுதி இலக்கு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதும், வெறுப்பான செய்திகளை பரப்புவதுமாகும் என  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு  ஒருங்கிணைப்பு மையத்தின்  பிரதான நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவித்தார்.

"இத்தகைய செயற்பட்டாளர்களை தேவையற்ற வகையில் பிரபலமாக்காமல் இருப்பது மிக முக்கியமாக அமைகின்றது. கடந்த காலங்களிலும் இதேபோன்ற பல இணையத்தள தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,  இவ்வாறான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில்  இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு மையமானது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், செயலணியொன்றையும், செயற்குழுவொன்றையும்  நிறுவியுள்ளது. 
இச்செயற்குழுவில் இணைய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு  ஒருங்கிணைப்பு மையம் ஆனது, பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வரும், இலங்கையின் தகவல் மற்றும் தகவல் அமைப்புகளின் உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.

இவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இணையத்தள செயலிழப்பானது,  இணையப்பக்கத்தின் தோற்றத்தை அல்லது இணையத்தளம் தோன்றும் விதத்தை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், இணையத்தளங்களை இழிவுபடுத்தும் இம்முயற்சியில் தரவு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 
"தாக்குதல்தாரர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்மாற்றத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் நடவடிக்கை எடுக்க செயலணியினரால் முடிந்துள்ளது. இந்த இணையத்தள தாக்குதல்கள்  காலை 6.38 மணிக்கு ஏற்பட்ட நிலையில்,  காலை 7.30 மணியளவில் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழுவின், தகவல் பாதுகாப்பு பொறியாளர்களால்  இணையத்தளங்களை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3318,lanka,8610,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தமீழீழ சைபர் தாக்குதல் மூலம் தரவுகள் எதுவும் திருடப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.
தமீழீழ சைபர் தாக்குதல் மூலம் தரவுகள் எதுவும் திருடப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx53H8o8bA5KKqFRxF7UHcwpysASmjrNJAyGhD75lYAn_J7mQ0LkUxfJeKcYNdak92Zn1uKelog9n6GcgXID3k4ftOb0dKNVAn7c2juSokCHSTzVv4kUpqGnp2TuZT5oZ6v0TvYFYQ02g/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx53H8o8bA5KKqFRxF7UHcwpysASmjrNJAyGhD75lYAn_J7mQ0LkUxfJeKcYNdak92Zn1uKelog9n6GcgXID3k4ftOb0dKNVAn7c2juSokCHSTzVv4kUpqGnp2TuZT5oZ6v0TvYFYQ02g/s72-c/
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/blog-post_837.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/blog-post_837.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content