தர்மலிங்கம் சித்தார்த்தன்
ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை, ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கண்டித்துள்ளார்.

சிறு வயது முதலே கொழும்பில் வாழ்ந்து வந்ததால், வரலாற்று ஓட்டத்தை அறியாமல் சுமந்திரன் கருத்து தெரிவித்திருக்கலாமென தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் விரும்பி ஏற்றதல்ல. தவிர்க்க முடியாமல் அது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னதாக, அகிம்சை வழியில் நீண்ட பல வருடங்களாக நடததப்பட்ட போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. வேறு வழியின்றியே- தவிர்க்க முடியாத வரலாற்று ஓட்டமாகவே ஆயுதப் போராட்டம் உருவானது.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், அது காலத்தின் கட்டாயமாகவே பெரும்பாலான தமிழ் மக்களால் உணரப்பட்டது.
ஆயுதப் போராட்டம் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதல்ல. மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்றன ஆயுதப் போராட்டத்திற்கு கருவூட்டின. பொன்.சிவகுமாரன் முதலில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். பின்னர் பல போராட்ட இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. பிரபாகரன் அந்த போராட்டத்தை கூர்மைப்படுத்தினார்.
எம்.ஏ.சுமந்திரன் தனது பேட்டியில், சிறுவயது முதலே கொழும்பில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலால் அவர் இந்த அரசியல் போக்கை அறியாமல் விட்டிருந்திருக்கலாம்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் போராளிகள் சிறைகளில் சிக்கியபோது, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற பலர், அவர்களிற்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகினர். அவர்களின் குடும்பங்களின் சுக துக்கங்களை கவனித்துக் கொண்டார்கள். தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டம் பலனற்றதாக மாறி, ஒரு அரசியல் பரிணாமமாகவே ஆயுத வழிப் போராட்டம் உருவானது.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து அந்த வரலாற்று ஓட்டத்தில் பயணிப்பவன் என்ற ரீதியில், சுமந்திரனின் கருத்து தவறானது. அவருடைய கருத்தை தமிழர்கள் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே எனது கருத்து.