அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்...
அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா வெளியிட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.
பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.
காணொளியை இங்கு காணலாம் https://www.facebook.com/1617340378301946/posts/3044041818965121/



