தமிழ் தேசிய கூட்டமைப்பை சுற்றியுள்ள விஷக் கொடிகளை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் ச...
தமிழ் தேசிய கூட்டமைப்பை சுற்றியுள்ள விஷக் கொடிகளை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஹீகாந்தரூபன் கோரிக்கை விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு மக்களின் வாக்குகளை பெற்று அரச சுக போகங்களைஅனுபவித்தவர்கள் மீண்டும் அதே பாணியில் மக்களின் வாக்குகளை அபகரித்து தேர்தலில் வெல்ல நினைக்கிறார்கள்.
ஆகவே அப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்தலில் களையெடுக்க வேண்டி நேரம் தேர்தலில் வந்துவிட்டநிலையில் அதை மக்கள் சரியாக செய்யவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.