மக்களின் அன்றாட வாழ்க்கையை கூட சரி செய்யாத தலைமைகளை என்ன செய்வது என்றும் எனவே சரியான தலைமைகளை தேர்வு செய்யுங்கள் என தமிழர் விடுதலை கூட்டணி...
மக்களின் அன்றாட வாழ்க்கையை கூட சரி செய்யாத தலைமைகளை என்ன செய்வது என்றும் எனவே சரியான தலைமைகளை தேர்வு செய்யுங்கள் என தமிழர் விடுதலை கூட்டணியின் துணைத் தலைவர் அரவிந்தன் தெரிவித்தார்.
நேற்று நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தனர். எமது மக்கள் முகாம்களில் இன்று தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட வசதிவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மயிலிட்டி மற்றும் பல இடங்களில் இருக்கின்ற மக்கள் தமது காணிகளை விட்டு தமது சொந்த இடங்களை விட்டுவிட்டு
இன்றும் சுன்னாகம் மற்றும் மல்லாகம் என பல முகாம்களில் வசிக்கின்றனர்.
அவர்களுக்கான வீடு இல்லை காணிகள் இல்லை பொது மலசலகூடம் பொது குளியலறை என அவர்கள் பெரும் கஸ்டம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர் இவர்களுடைய காணிகள் இருந்தும் சொந்த மண்ணில் முகாம்களில் அனாதையாக உள்ளனர்
இது குறித்து எமது தலைமைகள் என்ன செய்தனர். அவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை கூட சரிசெய்யாத தலைமைகளை என்ன செய்வது என்றும்




