வாக்காளர் பட்டியல், யாழ் எக்ஸ்பிரஸ்
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு தொடர்பில் கிராம உத்தியோகத்தரின் ஊடாக வாக்காளர்களின் விபரம் பெறப்படவுள்ளது.
அத்துடன், 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்துடன் தொடர்புடைய விண்ணப்பப்படிவங்கள் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.