இவ்வருடம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அ...
இவ்வருடம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக வழமை போன்று இவ்வருடம் டிசம்பர் மாதம் பரீட்சைகளை நடாத்த தடைகள் ஏற்பட்டதோடு, இது தொடர்பாக நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.