தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி பதவிகளில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டமை தொடர்பில் அக் கட்சியின் மத்தியகுழு சில காரணங்களை முன்வைத்துள...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி பதவிகளில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டமை தொடர்பில் அக் கட்சியின் மத்தியகுழு சில காரணங்களை முன்வைத்துள்ளது.
குறிப்பாக கடந்த முறை ஜனாதிபதி தேர்தலிலை புறக்கணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமை, பாராளுமன்ற தேர்தலின் போது சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை மற்றும் புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்படுபவர் என்று அக் கட்சியால் அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணிய குற்றங்கள் மணிவண்ணன் மீது சுமத்தப்பட்டுள்ளது.