போதைப்பொருள், மேல்மாகாணம், யாழ் எக்ஸ்பிரஸ்
நேற்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் போதை பொருட்களுடன் சுமார் 400 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
மேல் மாகாணத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
386 சுற்றிவளைப்புகளில் 160 கிராம் 758 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின், 274 கிராம் 377 மில்லி கிராம் பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் மற்றும் 518 கிராம், 517 மில்லி கிராம் ஐஸ் வகை போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டி, நீர்க்கொழும்பு, மோதர, பாணந்துறை, மருதானை மற்றும் சபுகஸ்கந்த ஆகிய இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 20 கிராம் ஹெரோயின் மற்றும் 1538 போதைப் பொருள் மாத்திரைகளுடன் வாழைச்சேனை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனையில் வசிக்கும் 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் குழுவின் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர் என கருதப்படும் மொஹமட் ஃபைஸ் மொஹமட் பாரூஸ் அல்லது ´பிச்சை பாயிஸ்´ என்பவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்த லீ மொலவத்த பகுதியில் வைத்து அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 01 கிராம் மற்றும் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.