20ஆவது திருத்த சட்டமூல யோசனை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த திருத்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையி...
20ஆவது திருத்த சட்டமூல யோசனை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த திருத்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் அனைவரும் கையில் 20ஐ எதிர்ப்போம் என்கிற அடையாளமிடப்பட்ட சிவப்பு நிறப்பட்டி ஒன்றை கட்டியபடி சபைக்கு வருகைதந்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்முன் எதிரணியினர் வாகனப் பேரணியொன்றை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தியுள்ளனர்.
இதுவும் 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக செயற்பாடாகவே நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.