தங்காலை பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த 8 பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் கைது ...
தங்காலை பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த 8 பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பொலிஸாருக்கு நேற்று (29) கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 40 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.