குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென மரணமடைந்துள்ளார். வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெ...
குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென மரணமடைந்துள்ளார்.
வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதுடன், மயக்க நிலைக்கு உள்ளாகியிருக்கின்றார்.
இதனையடுத்து அவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதிக்கு கடந்த 18ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை.
இருப்பினும் அவரது தற்போதைய உடல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.