வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளவ...
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.
வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
83 பேரிடம் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.