சீனாவின் முன்னணி ரயர் உற்பத்தியாளரான ஷாண்டோங் ஹாஹுவா ரயர் கொம்பனி லிமிடெட், ஏற்றுமதி சந்தையை பூர்த்தி செய்வதற்காக ஹம்பாந்தோட்டையில் ஒரு ரயர...
சீனாவின் முன்னணி ரயர் உற்பத்தியாளரான ஷாண்டோங் ஹாஹுவா ரயர் கொம்பனி லிமிடெட், ஏற்றுமதி சந்தையை பூர்த்தி செய்வதற்காக ஹம்பாந்தோட்டையில் ஒரு ரயர் உற்பத்தி ஆலையை அமைக்க 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,
மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை எளிதாக்குவதற்காக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) தெரிவித்துள்ளது.
03 ஆண்டுகளுக்குள் ஏற்றுமதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை மூலம் லொரிகள், பேருந்துகள் மற்றும் பயணிகள் கார்களுக்குத் தேவையான அனைத்து எஃகு ரேடியல் ரயர்களையும் தயாரிக்கும். இது கிட்டத்தட்ட 2, 000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குள் உள்ள தொழில்துறை பூங்காவில் 121 ஏக்கர் நிலத்தில் ஷான்டோங்கின் தொழிற்சாலை அமைந்திருக்கும்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு (எச்ஐபிஜி) இந்த நில அளவை ஷாண்டாங்கிற்கு தொழில்துறை பூங்காவிற்குள் முதல் வெளிநாட்டு நேரடி முதலீடாக (எஃப்.டி.ஐ) வழங்கியுள்ளது.
திட்டத்தின் முதல் கட்டத்தில், நிறுவனம் ஆண்டுக்கு 9 மில்லியன் ரயர்களை 45,000 கொள்கலன்கள் வழியாக அனுப்ப இலக்கு வைத்துள்ளது.